ஊழல் குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற அரச அதிகாரியொருவருக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற அரச அதிகாரியொருவருக்கு விளக்கமறியல்

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

உத்தியோகப்பூர்வ வாகன ஆய்வு அறிக்கைகளை வழங்குவதற்காக தனியார் காப்புறுதி நிறுவனமொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த அறிக்கைகள் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பயனளித்ததாகவும், அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிதி ஆதாயத்திற்காக தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி அறிக்கைகளை வழங்கியதாக அரசாங்க ஆய்வாளராகப் பணியாற்றிய டி. எச். எல். டபிள்யூ. ஜெயமன்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து
இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )