மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்ள வேண்டும் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்ள வேண்டும் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்ள வேண்டும். பெண்ணாக ஆணுக்கும், ஆணாக பெண்ணுக்கும் மரியாதை செலுத்தும் சமூகத்தினுள் இந்த உயர்ந்த மனித தத்துவங்களை அடைய முடியும் என குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உலகம் முழுவதும் பணியிடங்களில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வரலாறு உண்டு. அதன் மூலம்தான் மகளிர் தினம் வெற்றி பெறுகிறது.

வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் பெண்களின் இடம், சலுகைகளைப் பெறுவதில் எப்போதுமே கேள்விகள் இருந்து வருகின்றன.

சலுகைகளை அனுபவிப்பதில் பெண்களுக்கு சமமற்ற இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை, பெண்களுக்கு உணர்திறன் வாய்ந்த வரவு செலவு திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம்,” என்று கூறினார்.

Share This