தேசபந்து தென்னகோனின் பதவி – நாடாளுமன்ற பிரேரணை ஊடாக பறிக்க தீர்மானம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை,பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.
115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பிரேரணை ஊடாக அவரது பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்து தம்மை கைதுசெய்யாதிருப்பதற்கான உத்தரவை பிறபிக்குமாறு மாத்தறை நீதிமன்றில் கோரியிருந்தார்.
என்றாலும், கடந்த மார்ச் 19 ஆம் திகதி மனுவொன்றை சமர்ப்பித்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிரகாரம் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.