
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்த தீர்மானம்
நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரமே விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
எனினும், எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இசை போன்ற பாடநெறிகளிலும் இம்மாணவர்களை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார். இதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, பல்கலைக்கழக விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் தங்குமிட உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயப்படுத்தப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
