அரகலயவில் வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

வாராந்தோறும் ஒவ்வொரு பட்டியலை வெளியிடும் அரசாங்கம் இன்னுமும் வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் தற்போது வீடுகள் எரிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொண்ட நட்டஈட்டுத் தொகை பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, எனினும், வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தப் பட்டியலை வெளியிட்டால் நாடாளுமன்றத்தில் காணப்படும் கட்சியில் உள்ளவர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளடங்கும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.
மேலும், குறித்த பட்டியல் பொலிஸ் மா அதிபரிடம் உள்ளதாகவும் அதனை சபையில் வெளிப்படுத்துமாறும் பிமல் ரத்நாயக்கவிடம் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.