பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் காலமானார் – மூன்றாம் சார்ளஸ் மன்னர்  இரங்கல்

பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் காலமானார் – மூன்றாம் சார்ளஸ் மன்னர்  இரங்கல்

பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் 88 வயதில், தனது டோர்செட்டில் உள்ள வீட்டில் காலமாகியுள்ளார்.

ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற இவர், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தத்துவ மற்றும் அரசியல் கருப்பொருள்களை ஆராயும் நாடகங்களை எழுதியவர்.

அவரது குடும்பத்தினருக்கு மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சர் டாமின் நண்பரான எழுத்தாளர் ராபர்ட் ஹாரிஸ், அவரது திறமையை பாராட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தான் விரும்பிய மிகவும் பொறாமைப்படத்தக்க வாழ்க்கையை அவர் வாழ்ந்தார் என்றும் அவர் மிகவும் திறமையானவர் என்றும்
ராபர்ட் ஹாரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This