மர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றத்தில் மர்வின் சில்வா ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலியான பத்திரங்களை தயாரித்து அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்நை தனியார் துறைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மர்வின் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.