இந்தியாவுடன் உறவு, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் – ட்ரம் புதிய விளக்கம்

அமெரிக்கா இந்தியாவுடன் அரசியல் ரீதியான இராஜதந்திர முறைகளை வலுவான முறையில் தொடர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபாதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலுயுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாடு ஒன்றுடன் உறவை சீரழிக்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் டெபோரா ரோஸ், ரோ கன்னா தலைமையிலான 19 பேர் கொண்ட குழு, டொனால்ட் ட்ரம்பிடம் பலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளதுடன் அமெரிக்;க – வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க உற்பத்தியாளர்கள் முதலீட்டாளர்கள் சுகாதாரம், எரிசக்தி போன்ற முக்கிய வர்த்தக உள்ளீடுகளுக்கு இந்தியாவை நம்பியுள்ளனர் இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தைகளில் முக்கியத்துவம் வகிக்கின்றனர்.
ஆகவே அத்தகைய தன்மை கொண்ட சூழலில், இந்திய முதலீட்டாளர்கள் அமெர்க்காவுடன் உறவை பேணக்கூடிய முறையில் அமெரிக்க – இந்திய பொருளாதார இராஜதந்திர உறவு மேம்பட வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கு எவரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்தியாவுடன் அமெரிக்கா உறவை பேணுவதாவும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை காங்கிரஸ் வரவேற்று ஒத்துழைக்க வேண்டும் என்றும் டொனால்ட் ட்ரப் கூறியுள்ளளார்.