டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு

இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக 03 இல் 02 பங்கு பெரும்பான்மை பெற்று 48 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

இதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Share This