அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்

அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்

அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கப்பட்டால், ஒரு கிலோ அரிசியை 135 ரூபாவிற்கு இறக்குமதி செய்ய முடியும்.

ஆனால் வரியை குறைத்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும். வரியின் மூலமே உள்ளூர் விவசாயிகள் காக்கப்படுகின்றனர்.

110 – 115 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் உற்பத்தி செய்யப்படும் அரிசியே தற்போது சந்தையில் கிடைக்கின்றது.

எனவே, அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் விவசாயிகள் கடும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This