பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் அதிக விலைக்கு சிவப்பு பச்சையரிசி விற்பனை

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் அதிக விலைக்கு சிவப்பு பச்சையரிசி விற்பனை

யக்கலமுல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்றை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட 299 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின்படி, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

பலநோக்கு கூட்டுறவு சங்கம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசியை விற்பனைக்காக வைக்காமல் கிடங்கிலிருந்து எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலநோக்கு கூட்டுறவு சங்கம் மூலம் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்று அதிக தொகைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பலநோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் விற்பனையாளர்கள் இருவருக்கு எதிராக இம்மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

எதிர்வரும் வாரத்தினுள் காலி மாவட்டத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த சுமார் 15 விற்பனையாளர்களை கைது செய்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This