மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

கடந்த 2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது சாட்சியத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share This