
5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 7(4)(b) இன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறிலங்காவில் இலங்கையில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, 85 ஆக அதிகரித்துள்ளது.
TAGS அரசியல் கட்சி
