
ரியல் மெட்ரீட் அணி அபார வெற்றி
லா லிகா கால்பந்து தொடரில் அலவேஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மெட்ரீட் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
கைலியன் எம்பாப்பே மற்றும் ரோட்ரிகோ கோஸின் கோல்களின் உதவியுடன் ரியல் மெட்ரீட் வெற்றியை தனதாக்கியுள்ளது.
இந்த வெற்றியுடன் ரியல் மெட்ரீட் அணி 39 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா அணி 43 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றது.
ஆரம்பம் முதல் மிகவும் விருவிருப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியின் 24வது நிமிடத்தில் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அணித்து ரியல் மெட்ரீட் அணியை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இதனால் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரீட் அணி முன்னிலைப்பெற்றது.
எனினும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் அலவேஸ் அணியின் விசென்ட் 68வது நிமிடத்தில் கோல் அடிக்க ஒன்றுக்கு ஒன்று என சமநிலைபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் கடும் முயற்சிகளை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், போட்டியின் 78வது நிமிடத்தில் ரியல் மெட்ரீட் அணியின் ரோட்ரிகோ கோஸ் கோல் அடிக்க அந்த அணியின் வெற்றி உறுதியானது.
இறுதியில் போட்டியின் முடிவில் ரியல் மெட்ரீட் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தொடரின் கடந்த ஒன்பது போட்டிகளில் ரியல் மெட்ரீட் அணி பதிவு செய்த மூன்றாவது வெற்றி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
