ரியல் மெட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

ரியல் மெட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

ரியல் மெட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக அல்வாரோ அர்பெலோவா நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்த அணியின் பயிற்சியாளர் சாபி அலோன்சோ பரஸ்பர ஒப்புதலின் பேரில் வெளியேறியுள்ள நிலையில் புதிய பயிற்சியாளர்  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்சிலோனாவுக்கு எதிரான ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், சாபி அலோன்சோ பரஸ்பர ஒப்புதலுடன் பதவி விலக முடிவு செய்திருந்தார்.

அவர் எட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே அணியின் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அணியின் பயிற்சியாளராக அல்வாரோ அர்பெலோவா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்வாரோ அர்பெலோவா 2009-2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரியல் மெட்ரிட் அணிக்காக 238 முறை விளையாடியுள்ளார்.

இவர் விளையாடியப் காலப்பகுதியில் இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஒரு முறை லா லிகா பட்டத்தையும் மெட்ரிட் அணி வென்றிருந்தது.

இந்நிலையில், அர்பெலோவா தலைமையில் நடைபெறும் முதல் போட்டியில் இன்று புதன்கிழமை ரியல் மெட்ரிட் அணி விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )