யாழில் எலிக் காய்ச்சல் நோய் சடுதியாக குறைவு

யாழில் எலிக் காய்ச்சல் நோய் சடுதியாக குறைவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்பொழுது, காய்ச்சல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் இந்த எலிக் காச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Share This