புதிய எம்.பிக்களுக்க விரிவுரை வழங்க தயாராகும் ரணில்
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய நாடாமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சியின் உயர்மட்டத்தில் நடத்திய சந்திப்பின் போது இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரம் குறித்து விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன் கூறியுள்ளதாகவும் அதற்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை அழைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைத்து தனது விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.