நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரணில்

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார்.

வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வந்திருந்தார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது பாரியாருடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கென அரச நிதியைப் பயன்படுத்தி லண்டனிற்கு விஜயம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச நிதியை தனிப்பட்ட விடயத்திற்கு தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதியொருவர் கைதுசெய்யப்பட்ட முதற்சந்தரப்பம் இதுவாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )