
நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு
“நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருமாறு நாம்தான் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ஆனால் இதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. எனினும், நாட்டுக்கு தேவையேற்படும்பட்சத்தில் பொறுப்புகளில் இருந்து தப்பியோடும் தலைவர் அவர் அல்ல. பொறுப்பை ஏற்பார்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு வெற்றியளித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
TAGS ரணில் விக்கிரமசிங்க
