மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை பெற்றுகொடுத்தார்

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் உங்களிடம் (தேசிய மக்கள் சக்தி) இருந்து எங்களுக்கு உபதேசம் அவசியமில்லை.
மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே நடவடிக்கை எடுத்தார் என்பதை மறக்க வேண்டாம்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
