
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி
படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், துணை ஆயுதக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
இதையடுத்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
