ராஜிதவுக்கு விளக்கமறியல்

ராஜிதவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

மோதரை மீன்வளத் துறைமுகத்தை குறைந்த விலையில் தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விட மீன்வளக் கூட்டுத்தாபன இயக்குநர்கள் குழுவை நிர்பந்தித்ததாக இவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Share This