பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்த களஞ்சியசாலையில் சுற்றிவளைப்பு

மின்னேரியா பிரதேசத்தில் நெல் மற்றும் பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்து வந்த நெல் களஞ்சியசாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.
பழுதடைந்த நெல்லுடன் கலந்த சுமார் 6,000 கிலோ நெல் குறித்த களஞ்சியசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நெல் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் விவகார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, களஞ்சியசாலையின் உரிமையாளரை எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட நெல் கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டிருக்க முடியுமா அல்லது விலங்குகளின் தீவனத்திற்காக அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.