இந்தோனேசியாவில் சா்ச்சைக்குரிய இராணுவ சட்டம் நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் இராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.
இந்த இராணுவ சட்டத்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்யாமலேயே மேலும் பல அரசுப் பொறுப்புகளை வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தலைமைத் தளபதியுமான பிரபாவோ சுபியாந்தோவுக்கு ஆதரவான கட்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன.
இருந்தாலும், இந்தோனேசியாவின் மிகப் பலவீனமான ஜனநாயகத்துக்கு இந்த சட்டத் திருத்தம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஜனநாயக ஆதரவாளா்களும் மனித உரிமை ஆா்வலா்களும் அச்சம் தெரிவித்துள்ளனா்