பண்டிகை காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறைமை கருத்திற்கொள்ளப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )