இந்த ஐந்து பொருட்களையும் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள்…என்ன பலன் தெரியுமா?

நாம் உறங்கும்போது தலையணைக்கு கீழ் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம் எதிர்மறை விடயங்களை துரத்த முடியும் எனவும் திருமணம் கைகூடும் எனவும் கூறப்படுகிறது.
கிராம்பு – ஒரு சிலருக்கு இரவில் உறங்கும்போது கெட்ட சொப்பனங்கள் வந்து உறக்கத்தை கெடுக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கும்போது எதிர்மறை சக்திகள் தடுக்கப்படும்.
எலுமிச்சைப் பழம் – நேர்மறை ஆற்றல், தெய்வீக சக்தி கொண்ட எலுமிச்சைப் பழத்தை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
ஏலக்காய் – ஏலக்காயை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் செல்வம் அதிகரிக்கும். மேலும் இதிலிருந்து வெளிவரும் சக்தி ஆழ்மனத்துக்கு சக்தியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
விரலி மஞ்சள் – மஞ்சள் புனிதமான ஒரு பொருள். அத்தகைய மஞ்சளை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் திருமணத் தடை நீங்கும், காதல் கைகூடும் எனக் கூறப்படுகிறது.
ஜாதிக்காய் – மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்டது ஜாதிக்காய். இதனை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கும்போது தொழிலில் இலாபம் வந்து சேரும் எனக் கூறப்படுகிறது.