16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்

16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்

தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர்.

இவர்களை கைது கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது இதனை தொடர்நது தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் , நிர்மல்குமார் நேற்று வெளியே வந்தனர்.

வெளியே வந்த உடன் முதலில் நிர்மகுமார் விஜய்யை சந்தித்தார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தார். புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

உச்ச நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் மற்றும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This