புஷ்பா 2…இதுவரையில் 1760 கோடி வசூல்
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2.
தமிழ்,ஹிந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இப் படம் வெளியாகி 25 நாட்களுக்குள் 1760 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுவரையில் குறுகிய காலகட்டத்தில் அதிகம் வசூலித்த படங்களில் வரிசையில் புஷ்பா 2 திரைப்படம் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.