
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் சிறையில் பணியில் இருந்த பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி, வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பெண் வைத்தியர் கூச்சலிடவே சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் விசாாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏழு நபர்களுக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்ற அமர்வு மரண தண்டனை விதித்தது.
வித்திய படுகொலை சம்பவத்திற்கு நீதி கோரி, நாடு தழுவிய போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
2015 மே 15 அன்று நடைபெற்ற வித்யாவின் இறுதிச் சடங்கில், உள்ளூர் அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
