புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடுங்கள் – ஜீவன் தொண்டமான் கோரிக்கை

புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடுங்கள் – ஜீவன் தொண்டமான் கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்தத் தவறியதால், அதிகரிக்கப்பட்ட ஊதியம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலையில் நேற்று (22) நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும், நீண்ட காலமாக தோட்ட நிறுவனங்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக, தொழிற்சங்க சார்பைப் பொருட்படுத்தாமல், தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெற தோட்டங்களுக்குள் போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிகளைப் பாராட்டுவதாகவும், அவரைச் சூழ்ந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )