விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினம்

விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினம்

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினத்தை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொது தினத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமாதித்தன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்த பொது தினத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த பொது தினம் நடைபெறவுள்ளது.

இதன்போது, குறித்த அமைச்சு தொடர்பான தீர்க்கப்படாத பொதுப் பிரச்சினைகளை பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அத்தருணத்தில் அந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This