
சிட்னியில் மூன்று மாதங்களுக்கு போராட்டங்களுக்கு தடை
சிட்னியில் மூன்று மாதங்கள்வரை போராட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போண்டி பயங்கரவாத தாக்குதலையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்குரிய சட்டதிருத்தங்களுக்கு மாநில நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
இதற்கமைய சிட்னியில் பொது இடங்களில் 14 நாட்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் காவல்துறை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மீளாய்வு என்ற அடிப்படையில் மூன்று மாதங்கள்வரை தடையை நீடிப்பதற்குரிய ஏற்பாடு உள்ளது.
முதற்கட்டமாக இரு வாரங்களுக்கு போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டத்துக்கு அனுமதிகோரி எந்த தரப்பும் விண்ணப்பிக்க முடியாது.
