யாழ் பல்கலையில் போராட்டம்

“ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு” என்ற கோரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நாடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தன.