மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு தூபியிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம் காந்தி பூங்காவரை முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு தூபியிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம் காந்தி பூங்காவரை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீனேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம், அரியனேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Share This