மோகன்லால் இயக்கத்தில் பரோஸ் திரைப்பட பாடலின் ப்ரமோ வெளியானது
மலையாள நடிகர் மோகன்லால் பரோஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப் படத்தில் மீரா ஜாஸ்மின், ரபேல் அமர்கோ, நடிகை பாஸ் வேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வஸ்கொடகாமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாத்த பாதுகாவலர் பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டே இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் பம்பூசியா பாடலின் வீடியோ ப்ரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.