பிரிஸ்பேனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு தடை

பிரிஸ்பேனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு தடை

பிரிஸ்பேன், ஸ்டோரி பாலத்தில் இடம்பெறவிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சமூக பாதுகாப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் குறித்த பேரணிக்கு தடைகோரி குயின்ஸ்லாந்து பொலிஸார் நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.

இந்நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி ஜேனெல்லே பிராசிங்டன், இன்று ஒப்புதல் வழங்கினார்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையே பாலஸ்தீனு ஆதரவு குழுக்களால் மேற்படி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, சிட்சி துறைமுக பாலத்தில் இடம்பெற்ற பேரணியில் ஒரு லட்சம்பேர்வரை பங்கேற்றிருந்தனர். ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற வரவாற்று முக்கியத்துமிக்க போராட்டமாக இது பதிவாகியுள்ளது.

Share This