நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள்

நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள்

நாட்டின் முக்கிய தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிக விலையில் நெல்லை கொள்முதல் செய்வதாக அறியக்கிடைத்துள்ளது.

அதிக விலைக்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிகமாக பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதால் அவர்களுக்கான நெல் மொத்தமாக விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், ஒரு விவசாயியிடமிருந்து அதிகபட்சமாக 5000 கிலோகிராம் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share This