அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு எடுப்பதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களும் , பல நீதிபதிகளும் இந்த வீடுகளுக்கான கோரிக்கைகளை இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்தனர்.

​​இருப்பினும், அமைச்சர்களுக்கான பங்களாக்கள் மற்றும் ஜனாதிபதி பங்களாக்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தற்போது அவற்றின் மதிப்பை மதிப்பிட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

குறித்த மதிப்பீட்டின் பின்னர் அந்த பங்களாக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ள வெவ்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அந்த கோரிக்கைகள் தொடர்பில் இது வரையில் பரிசீலிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக 9 பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கண்டி, நுவரெலியா, அநுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிபிட்டிய, பெந்தொட்டை மற்றும் மஹியங்களை ஆகிய பிரதேசங்களில் குறித்த ஜனாதிபதி பங்களாக்கள் காணப்படுகின்றன.

சில அமைச்சு பங்களாக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றை புனரணமைப்பதில் நிதித் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

Share This