மாத்தறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் நேற்று (29) மாலை தப்பிச் சென்றுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

நேற்று மாலை சிறைச்சாலை கண்காணிப்பாளரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரியாமல் தப்பிச் சென்றுள்ளார்.

பாணந்துறை, குருப்புமுல்லவைச் சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதி தனது நன்னடத்தை காரணமாக சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )