பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உண்மையான பௌத்த தத்துவத்தின் மூலம் அனைவரது வாழ்விலும் ஒளியையும் அமைதியையும் கொண்டு வருவதற்காகப் பாடுபடுவது மிகவும் முக்கியமானதாகும் என பிரதமர் தனது பொசன் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது.

“பௌத்த சமய வரலாற்றின்படி, நாட்டில் வன்முறையற்ற ஒரு அகிம்சை சமூகத்தை உருவாக்குவதற்கான முதற்படி பொசன் நோன்மதித் தினத்தை அடிப்படையாகக் கொண்டே எடுத்துவைக்கப்பட்டது.

உன்னதமான கலாசார வாழ்க்கையையும் பரிவுணர்வையும் கொண்ட மக்களை உருவாக்கும் உயர்ந்த பொறுப்பை சுமந்துள்ள ஒரு அரசாங்கம் என்ற வகையில், அகிம்சை மற்றும் சகவாழ்வின் செய்தியை மென்மேலும் பிரகாசிக்கச் செய்ய பாடுபடுவோம்.

முழு நாடும் மீண்டும் புதியதோர் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிப் பயணிக்கும் இச்சந்தர்ப்பத்தில், இந்த ஆண்டு பொசன் நோன்மதித் தினம், அந்த புதிய யுகத்திற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்பது தமது பிரார்த்தனையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This