
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் விஜயம்
டிட்வா புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டார்.
ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலனையும் அவர் விசாரித்தார்.
மேலும் மீட்புப் பணியாளர்களைச் சந்தித்து மறுசீரமைப்புக்கான தொடர்ச்சியான முயற்சிகளைக் கவனித்தார்.
நவம்பர் 27 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெள்ளம் சூழ்ந்ததால் பல்கலைக்கழகம் பாரிளவில் சேதமடைந்திருந்தது.
இதன்போது பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் பிரதமர் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் கிடைக்கும் என்றும் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.
CATEGORIES இலங்கை
