பிரதமர் சீனாவுக்கு விஜயம்

பிரதமர் சீனாவுக்கு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் எதிர்வரும் 29ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தியான்ஜினில் 31ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் பிரதமர், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், உலக அரசியலில் அமெரிக்கா-இந்தியா உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மற்றும் சீனா-ரஷ்யா கூட்டணி வலுப்படுதல், மாநாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )