புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெளிவூட்டிய பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெளிவூட்டிய பிரதமர்

கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் நேற்று (12) பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரந்த ஆகியோரின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி நிருவாகம், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சேவை போன்ற அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள, கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க வருகை தந்திருந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது, மேலும் பிரதமர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து கவனத்தில் கொண்டனர்.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பரீட்சை திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This