போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு விலை நிர்ணயம்

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மில்லி. 500 குடிநீர் போத்தல் 70 ரூபாவிற்கும், ஒரு லிட்டர் போத்தல் 100 ரூபாவிற்கும், 1.5 லிட்டர் போத்தல் 130 ரூபாவிற்கும், இரண்டு லிட்டர் போத்தல் 160 ரூபாவிற்கும், ஐந்து லிட்டர் போத்தல் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விலைகளின் கீழ், வர்த்தமானி வெளியிடப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களை, அவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள விலை எதுவாக இருந்தாலும், மேலே குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்வது கட்டாயமாகும்.
மேலும், வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதிக்குப் பின்னர் தயாரிக்கப்படும் குடிநீர் போத்தல்ல்களின் பேக்கேஜிங்கில் புதிய விலையைப் பட்டியலிடுவதும் கட்டாயமாகும்.
இந்த அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தல் குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ஐந்து லட்சம் முதல் ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.