சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் : அரசாங்கத்துக்கு அழுத்தம்

சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் : அரசாங்கத்துக்கு அழுத்தம்

கடந்த சில ஆண்டுகளாக சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி குறைந்து வருகிறது. சிகரெட் வரி தொடர்பாக நாடாளுமன்றம் புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா இன்று நாடாளுமன்றத்திவ் தெரிவித்தார்.

சிகரெட் வரியிலிருந்து கிடைக்கும் அரசாங்க வருவாய் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாயை விடக் குறைவாகும்.  சிகரெட்டுகளுக்கு வரி விதிக்கும் முறை தவறானது. WHO மற்றும் UNDP ஏற்றுக்கொள்ளும் 75 சதவீத வரி சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட வேண்டும் என்றும் ஹர்ஷா டி சில்வா கூறினார்.

சிகரெட்டுகள் மீதான வரியை மறுபரிசீலனை செய்து, இந்த விடயத்தில் நாடாளுமன்றம் புதிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )