ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்

ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 2025ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்க உள்ளார்.

இதன்போது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் முன்னணி வணிகப் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This