சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி புதிய திட்டம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி புதிய திட்டம்

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய இடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு பிராண்ட் சிட்டியை உருவாக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Share This