ஜனாதிபதி ஊடக விருது விழா – அமைச்சரவையில் முக்கிய முடிவு

ஜனாதிபதி ஊடக விருது விழா – அமைச்சரவையில் முக்கிய முடிவு

இலங்கையின் இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சித் திட்டங்களின் அச்சு ஊடக மற்றும் இணையத்தளங்களில் உள்ளடக்கங்கள் பொறுப்புடனும், சுயாதீனமாகவும் மற்றும் நேயர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பேணிச்செல்லும் நோக்கில் ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக ஜணதிபதி ஊடக விருது வைபவம் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனாலும், 2019 ஆம் ஆண்டின் பின்னர் குறித்த விருது வழங்கும் வைபவம் நடாத்தப்படவில்லை. குறித்த விருது வழங்கும் வைபவத்தை இவ்வாண்டு தொடக்கம் மீண்டும் அரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக, 2023 ஆம் ஆண்டுக்குரிய ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2025.11.11 அன்று ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவத்தை நடாத்துவதற்கும் அங்கு வெற்றியாளருக்கு வழங்கப்படுகின்ற பணப்பரிசை ரூபா. 100,000 வரைக்கும் மற்றும் வாழ்வில் ஒருதடவை மாத்திரம் வழங்கிக் கௌரவிக்கும் வாழ்நாள் விருதுக்கு வழங்கும் பணப்பரிசை 400,000 ரூபாய்களாக அதிகரிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This