ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, உலக நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இம்மாநாட்டில் 193 அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.

இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்று ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி , சீன ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பால் உலக நாடுகள் இன்று பிளவு பட்டு நிற்கின்றன. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்தில் இம்முறை ஐ.நா. மாநாடு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

Share This