பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி

பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் இந்தப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.

குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பாக இந்த பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளில் ஜனாதிபதி ஈடுபட உள்ளார்.

குறிப்பாக அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் எரிபொருளை நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி பேச்சுகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This